இதில் கீழ்க்கண்ட நூல்கள் உள்ளன.
1. 4448 - வியாதிகள் (ஒரு விளக்கம்) -சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர் டாக்டர். ச. அரங்கராசன், B.I.M.
2. சரீர சாஸ்திரம்
3. சித்தர் வைத்தியம்
4. சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
5. நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
முதல் நூல் அரிய ஆராய்ச்சி நூலாகும். சித்த மருத்துவத்தில் 4448 நோய்களுக்கு மருந்துண்டு என்று அனைவரும் அறிவர். ஆனால் அவைகளின் அட்டவணை யாரிடமும் இல்லை. சில நூல்களில் சில வகை நோய்களைப்பற்றி குறிப்புகள் இருக்கும். ஆனால் முழு விவரம் இருக்காது. இங்கு ஆசிரியர் பல்வேறு நூல்களிலிருந்து விவரங்களைச் சேகரித்து ஒப்பு நோக்கி அவைகளை விவரமாக எடுத்துரைத்துள்ளார்.
இந்நூல் தற்போதும் அச்சில் உள்ளது. அன்பர்கள் நூலை வாங்கி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகத்தை ஆதரிக்க வேண்டுகிறோம். இதனால், மேலும் பல்வேறு சுவடிகளை அச்சில் ஏற்றி தமிழக மக்கள் நன்கு பயன்பெற நூலகம் ஊற்சாகத்துடன் செயல்படும்.
கீழேயுள்ள விவரங்களைக் கொண்டு நூலை வாங்கலாம்.
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம்,
தஞ்சாவூர்.
தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீட்டு எண்.227
இரண்டாவது நூல் உடலின் அங்கங்களைப் பற்றி விவரித்து கூறும் நூல். இதில் முதலுதவிக் குறிப்புகளும் அடங்கியது.
மூன்றாவது, சித்த மருத்துவ சரித்திரம் பற்றி கூறும் ஒரு குறு நூல்.
நான்காவது ஐந்தாவது நூல்கள், மறைந்த நாடகப் பேராசிரியர் பம்மல் கே. சம்பந்த முதலியார் எழுதியது. அவரது அனுபவங்களைப் பற்றியும், சில ஆலோசனைகளையும் எழுதியுள்ளார்.